செய்திகள்

அல்லாஹ்வை கேவலப்படுத்தியவரை தலைவராக நியமித்து எதனை எதிர்பார்க்குறீர்கள்? – ரிஷாட்

Published

on

ஞானசார தேரரை பார்த்து இந்நாட்டில் வாழும் 20 இலட்சம் முஸ்லிம் மக்களும் பயப்படுவார்கள் என அரசாங்கம் நினைக்கிறதா? என பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன் கேள்வி எழுப்பினார்.

வரவு -செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துக்கொண்ட போதே அவர் மேற்குறிப்பிட்டவாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும்,  உரையாற்றுகையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி அல்லாஹ் எனக் கூறி முஸ்லிம்களுக்கு எதிராக செயற்படும் ஞானசார தேரரை ஒரே நாடு, ஒரே சட்டம்
என்கிற ஜனாதிபதியின் செயலணியின் தலைவராக நியமித்தன் நோக்கம் என்ன? ஆனால், அல்லாஹ்வை உலகின் 2 பில்லியன் மக்கள்
ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். 54 உலக நாடுகள் முஸ்லிம் நாடுகளாக இருக்கிறது.

அல்லாஹ்வை கேவலப்படுத்தியவரை தலைவராக நியமித்து எதனை எதிர்பார்க்குறீர்கள்? இந்நாட்டின் முஸ்லிம்கள் 20 இலட்சம் பேர் பயப்படுவார்கள் என்று நினைக்கிறீர்களா? எனவும் கேள்வி எழுப்பினார்

மத, இனவாதத்தை பேசித் திரிபவர்களை தலையில் தூக்கி வைக்க வேண்டாம். நாட்டில் டொலர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

அடுத்த நான்கைந்து மாதங்களில் நாட்டில் என்ன நடக்குமென தெரியாது என்றும் குறிப்பிட்டார்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version