செய்திகள்

ஐ.ம.சவின் ஆர்ப்பாட்டத்திற்கு செல்வோரைத் திருப்பியனுப்பும் பொலிஸார்!

Published

on

ஐக்கிய மக்கள் சக்தி இன்று (16) ஏற்பாடு செய்துள்ள ஆர்ப்பாட்டத்திற்கு இலக்கம் 5 கொழும்பு நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது

சுகாதார வழிகாட்டுதலுக்கு அமைய குறித்த ஆர்ப்பாட்டத்தை மேற்கொள்ளுமாறு நீதிமன்றமானது உத்தரவினைப் பிறப்பித்துள்ளது.

இதேவேளை ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுப்பதற்கு, தடைவிதிக்கும் இடைக்கால உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு பொரளை காவல்துறை, இலக்கம் 2 கொழும்பு நீதவான் நீதிமன்றில் விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் இன்று பிற்பகல் 2 மணிக்குக் கொழும்பு – விகாரமாதேவி பூங்கா வளாகத்தில் நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ள குறித்த ஆர்ப்பாட்டத்திற்குத் தடை விதிக்குமாறு காவல்துறை நீதிமன்றிடம் கோரிக்கை விடுத்தது.

இந்தநிலையில் சில நீதிமன்றங்கள் பொலிஸாரின் கோரிக்கைகளை நேற்று (15) நிராகரித்தது. மேலும், சில நீதிமன்றங்கள் அந்தக் கோரிக்கையினை ஏற்று ஆர்ப்பாட்டத்திற்கு தடைவிதித்தமையும் குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் வாழ்க்கை செலவு அதிகரிக்கின்றமை உள்ளிட்ட பல்வேறு காரணிகளை முன்னிலைப்படுத்தி ஐக்கிய மக்கள் சக்தி முன்னெடுக்கும் போராட்டதில் பங்கேற்பதற்கு வாகனங்களில் சென்றவர்களை பொலிஸார் சோதனையிட்டுள்ளனர்.

மேலும் பல பகுதிகளிலும் வீதி தடைகள் அமைக்கப்பட்டு பேருந்துகள் திருப்பி அனுப்பப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.

அதேநேரம், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசியல் பிரதிநிதிகளுடன் ஆர்ப்பாட்டத்திற்கு சென்றவர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையில் சில பகுதிகளில் அமைதியின்மை ஏற்பட்டிருந்தது.

இதேவேளை, ஜனநாயகம் மற்றும் கருத்து சுதந்திரத்தை இல்லாது செய்வதற்கான முயற்சிகளில் பொலிஸார் ஈடுபட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

#SrilankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version