செய்திகள்

விமான விபத்து- சாவடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு

Published

on

737 மேக்ஸ் வகை விமானம் விபத்துக்குள்ளானதால் சாவடைந்தவவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எத்தியேப்பியன் எயார்வேஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான தங்களது 737 மேக்ஸ் வகை விமானம் விபத்துக்குள்ளானது.

இந்த விமான விபத்தில் சாவடைந்த 157 பேரது குடும்பத்தினருக்கு, இழப்பீடு வழங்கப்படவுள்ளது.

அமெரிக்க நீதிமன்றத்தில் போயிங் நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது.

சிகாகோவில் உள்ள நீதிமன்ற ஆவணங்களின்படி, அவர்களின் சாவு க்கான பொறுப்பை விமான தயாரிப்பாளர் ஏற்றுக்கொள்கிறார்.

பதிலுக்கு, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் நிறுவனத்திடம் இருந்து தண்டனைக்குரிய இழப்பீடு கோர மாட்டார்கள்.

2.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள், அமெரிக்க நீதித்துறையுடன் அபராதம் மற்றும் இழப்பீடாக ஜனவரி மாதம் போயிங் ஒப்புக்கொண்டது.

விபத்தில் சாவடைந்த குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதியும் அடங்கும். 35 நாடுகளில் இருந்து விபத்துக்குள்ளான அனைத்து குடும்பங்களுக்கும் இந்த தொகை பகிர்ந்தளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கடந்த 2019ஆம் ஆண்டு அடிஸ் அபாபாவில் இருந்து நைரோபிக்கு புறப்பட்ட எத்தியோப்பியன் எயார்லைன்ஸ் 737 மேக்ஸ் விமானம்
விபத்துக்குள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

#world

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version