செய்திகள்

பங்காளிக்கட்சித் தலைவர்கள் உடனடியாக பதவி துறக்க வேண்டும்! – பெரமுன வலியுறுத்து

Published

on

“அரசை விமர்சிக்கும் பங்காளிக்கட்சித் தலைவர்கள் உடனடியாக அமைச்சு பதவிகளை துறக்க வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் மொட்டு கட்சி தலைவர்கள் அவர்களை வெளியேற்ற வேண்டும்.”- என்று வலியுறுத்தியுள்ளார் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி.

மொட்டு கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தினார்.

” அரச கூட்டணியிலுள்ள பங்காளிக்கட்சித் தலைவர்கள் அமைச்சு பதவி உட்பட அனைத்து சலுகைகளையும், வரப்பிரதாசங்களையும் அனுபவிக்கின்றனர். ஆனாலும் அரசை விமர்சிக்கின்றனர். இவர்கள் தமது தனிப்பட்ட தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளவே இவ்வாறு செயற்படுகின்றனர்.

அமைச்சு பதவி கிடைக்கவில்லை என்பதால் தயாசிறி ஜயசேகர உளறுகிறார். தனக்கு அமைச்சு பதவி கிடைக்கவில்லை என திஸ்ஸ வித்தாரண வெளிப்படையாகவே கவலை வெளியிட்டுள்ளார். விமல் வீரவன்ச, கம்மன்பில போன்றவர்களும் இப்படிதான். தனிப்பட்ட தேவைகளுக்காகவே அவர்கள் அரசை விமர்சிக்கின்றனர்.

விமர்சிப்பதாக இருந்தால் வெளியே சென்று விமர்சிக்க வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் இவ்வாறானவர்களை எமது கட்சி தலைவர்கள் வெளியேற்ற வேண்டும்.”- என்றார் திஸ்ஸ குட்டியாராச்சி எம்.பி.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version