செய்திகள்
இலங்கையிடம் இருந்து 8 மில்லியனை நஷ்டஈடாகக் கோரும் சீனா!-
இலங்கையிடமிருந்து 8 மில்லியன் அமெரிக்க டொலரை நஷ்ட ஈடாக சீன உர நிறுவனம் கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விஞ்ஞான ரீதியான பரிசோதனை முடிவுகளை மீறி, சோதனை முடிவுகளைத் தவறாகக் குறிப்பிட்டமை மற்றும் பொய்யான சோதனை முடிவைக்கொண்டு தவறான பிரசாரங்களை முன்னெடுத்தமை என்பவற்றுக்காக, விவசாய அமைச்சின் கீழுள்ள தேசிய தாவர தடுப்புக்காப்பு சேவையிடமிருந்து 8 மில்லியன் அமெரிக்க டொலர் நஷ்ட ஈட்டினைக் கோரியதாகவே கூறபடுகிறது.
தேசிய தாவரத் தடுப்புக் காப்பு சேவையின் அலட்சியத்தினாலும் மற்றும் தவறான அறிக்கைகள் காரணமாகவும் தமக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகத் குறித்த கடிதத்தில் தெரிவித்துள்ளது.
இலங்கைக்குக் கொண்டு வரப்பட்ட, ஹிப்போ ஸ்பிரிட் கப்பலிலுள்ள சேதன உரத்தில் அர்வீனியா எனப்படும் தீங்கு விளைவிக்கும் பக்டீரியாக்கள் இல்லை என்றும், அதில் அதிக பாதுகாப்பான மற்றும் அதிக திறன் கொண்ட சேதன உரமே இருப்பதாகவும் சீன கிண்டாவோ சீவிங் நிறுவனம் தெரிவித்துள்ளது.
குறித்த கடிதம் கிடைத்த மூன்று நாட்களுக்குள் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தநிலையில் இவ்விடயம் தொடர்பில், இதுவரை தமக்கு உத்தியோகபூர்வமான தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை என தேசிய தாவரத் தடுப்புக் காப்பு சேவையின் மேலதிக பணிப்பாளர் வைத்தியர் துஷார விக்கிரமாராச்சி தெரிவித்துள்ளார்.
#SrilankaNews
You must be logged in to post a comment Login