செய்திகள்

வன்முறையால் 460 குழந்தைகள் சாவு – யுனிசெப் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

Published

on

ஆப்கான் வன்முறையில் 460 குழந்தைகள் சாவடைந்ததாக யுனிசெப் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

ஆப்கானில் வன்முறையில் கடந்த 6மாதத்தில் மட்டும் 460 குழந்தைகள் சாவடைந்துள்ளனர்.

இது தொடர்பில் ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியம் (யுனிசெப்) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கடந்த வியாழக்கிழமை காலையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பெண் குழந்தைகள், இரண்டு ஆண் குழந்தைகள் உள்பட ஒன்பது பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

குந்தூஸ் பகுதியில், போர்க்காலத்தில் பதுக்கிவைக்கப்பட்ட குண்டு திடீரென வெடித்ததால் அக்குடும்பமே பரிதாபமாக சாவடைந்துள்ளது .

அத்தோடுநாளுக்கு நாள் மூளை முடக்கத்தால் பாதிக்கப்பட்ட 10 முதல் 15 குழந்தைகள் தினமும் சிகிச்சைக்காக அழைத்துவரப்படுவதாக ஆப்கானை சேர்ந்த மருத்துவர் முகமது பாஹிம் தெரிவித்துள்ளார் .

பல ஆண்டுகள் நீடித்த உள்நாட்டு போர் குறித்து விளக்கிய யுனிசெப், ஆப்கானில் போர் காரணமாக ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது .

ஆப்கானில் இந்த ஆண்டில் மட்டும் இத்தனை குழந்தைகள் குண்டுவெடிப்பில்சாவடைந்தது கவலை அளிப்பதாக யுனிசெப் தெரிவித்துள்ளது .

வறுமை, உணவுப் பஞ்சம், ஊட்டச்சத்து குறைபாடு போன்ற காரணங்களாளும் குழந்தைகள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் யுனிசெப் தன்னுடைய அறிக்கையில் தெரிவித்துள்ளது .

#world

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version