செய்திகள்

21 ஆம் நூற்றாண்டின் மிக நீண்ட சந்திர கிரகணம்!

Published

on

நவம்பர் மாதம் 19 ஆம் திகதி நீண்ட சந்திர கிரகணம் நிகழும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் இதனை அறிவித்துள்ளது.

இது 03 மணித்தியாலம், 28 நிமிடங்கள், 23 வினாடிகள் நீடிக்கும் என்றும், இது 21 ஆம் நூற்றாண்டின் மிக நீண்ட சந்திர கிரகணம் என்றும் நாசா தெரிவித்துள்ளது.

இதன்போது, நிலவின் மேற்பரப்பு 97 சதவீதம் சிவப்பு நிறமாகக் காட்சியளிக்கும்.

குறிப்பாக வட அமெரிக்க பிராந்தியத்துக்கு இது தென்படும் என்றும், 2100 ஆம் ஆண்டு வரை மீண்டும் இவ்வாறானதொரு நீண்ட சந்திரக் கிரகணம் நிகழ வாய்ப்பில்லை எனவும் நாசா தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 08 தசாப்தங்களில் மேலும் 179 சந்திர கிரகணங்கள் ஏற்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 19 ஆம் திகதி இவ்வருடத்துக்கான சந்திர கிரகணம் நிகழும் நிலையில், அடுத்த வருடம் மே 16 ஆம் திகதி மற்றுமொரு சந்திர கிரகணம் நிகழவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version