செய்திகள்
சுகாதார முறைகளைப் பின்பற்றுகிறீர்களா என அரசு தேட இயலாது!
கொரோனா வைரஸ் தொற்றுக்கெதிரான போரை வெற்றிகொள்வதற்கு நாட்டு மக்களின் ஒத்துழைப்பே மிக அவசியம் என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்ணான்டோ புள்ளே தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது நாளாந்தம் 500 இற்கும் மேற்பட்ட தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுகின்றனர். சில இடங்களில் தொற்று வீதம் அதிகரித்துள்ளது. எனவே, மக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும். சுகாதார நடைமுறைகளை முழுமையாகப் பின்பற்ற வேண்டும்.
மக்கள் முகக்கவசம் அணிகின்றனரா, வீடுகளில் ‘பார்ட்டி’ நிகழ்வு இடம்பெறுகின்றதா என்பதை அரசாங்கம் வந்து தேடிக்கொண்டிருக்க முடியாது.
எனவே, மக்கள் பொறுப்புடன் செயற்பட்டு வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்ணான்டோ புள்ளே தெரிவித்துள்ளார்.
அதேவேளை, சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி தீபாவளிப் பண்டிகையை கொண்டாடுமாறும், பயணங்களை மட்டுப்படுத்திக்கொள்ளுமாறும் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் அறிவுறுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
#SrilankaNews
You must be logged in to post a comment Login