செய்திகள்

இலங்கைத் தமிழர்கள் ஆதரவற்றோர் அல்ல – ஸ்டாலின் இடித்துரைப்பு

Published

on

தமிழர்கள் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் ஒரு தாய் மக்கள் தான் நாம். அனைவரும் தமிழ் இனத்தைச் சேர்ந்தவர்தான். கடல் தான் எம்மை பிரிக்கின்றது. இலங்கை தமிழர்களுக்கான நலத்திட்டங்களை மேலும் தொடர்ந்து மேற்கொள்வோம். இலங்கை தமிழர்கள் ஆதரவற்றவர் அல்ல.

இவ்வாறு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேலூர் மாவட்ட மேல்மொணவூரில் இலங்கை தமிழர்களுக்கு 142 கோடி ரூபா செலவில் 3 ஆயிரத்து 510 வீடுகள் கட்டுவதற்கான அடிக்கல் நடும் நிகழ்வில் கலந்து கொண்டு அடிக்கல்லை நட்டு வைத்து உரையாற்றும் போதே தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு முறையும் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி பொறுப்பேற்றதும் இலங்கைத் தமிழர்களுக்கு பல்வேறு நலத் திட்டங்களை செய்து வருகின்றது.

இலங்கைத் தமிழர்களுக்கு தி.மு.க. என்றும் குரல் கொடுக்கும். கடந்த 10 ஆண்டுகளாக அ.தி.மு.க. அரசு இலங்கைத் தமிழர்களுக்காக எதையும் செய்யவில்லை.

நாம் நாம் இலங்கை தமிழர் நலவாழ்வு திட்டங்களுக்காக நிதி ஒதுக்கியுள்ளோம். மற்றும் முகாம்களில் உள்ள இலங்கைத் தமிழ் மாணவர்களின் கல்விக் கட்டணத்தை அரச ஏற்கும்.

இலங்கை தமிழர்கள் என்றுமே ஆதரவற்றவர்கள் அல்ல. தி.மு.க., அரசு இலங்கை தமிழர்களுக்கு என்றைக்கும் துணை நிற்கும். என்னை உங்களின் உடன்பிறப்பாக ஏற்றுக்கொள்ளுங்கள் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

#srilanka #india

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version