செய்திகள்
தடுப்பூசிகளுக்கு கட்டுப்படாத A30 கொரோனா பிறழ்வு
பைஸர் மற்றும் அஸ்ராஜெனரா ஆகிய அனைத்து தடுப்பூசிகளுக்கு கட்டுப்படாத அதனை தகர்க்கக் கூடிய புதிய வகை A30 கொரோனா வைரஸ் பிறள்வு சில நாடுகளில் இனங்காணப்பட்டுள்ளது.
இந்தப் பிறவு வைர1் இலங்கையில் நுழையாதிருப்பது தொடர்பில் தீவிர அவதானம் செலுத்தி வருவதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்
உலகம் முழுவதும் இந்த வைரஸ் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது.
இந்த வைரஸ் அஸ்ராஜெனரா மற்றும் பைஸர் போன்ற முன்னிலை தடுப்பூசிகளுக்கும் கட்டுப்படாது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மாறுபாடு பரவினால் பெரும் சிக்கலை சந்திக்க நேரிடும் எனவும் இன்னும் 4 வாரங்களில் இதன் மோசமான விளைவுகள் தென்படும் கூறப்படுகிறது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்கான என்பவை விசேட அவதானம் செலுத்தியுள்ளன. அந்த நாடுகளில் குளிர் காலநிலையில் இந்த பிறள்வு பரவுமாயின் பெரும் நெருக்கடிகளை அந்த நாடுகள் சந்திக்க நேரிடும்.
எவ்வாறிருப்பினும் இது தொடர்பில் நாமும் இலங்கையில் அவதானத்துடன் செயற்படுவோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
#SruLankaNews
#World
You must be logged in to post a comment Login