செய்திகள்

கெரவலப்பிட்டிய யுகதனவி மின்உற்பத்தி விவகாரம் – மூன்று ஒப்பந்தங்கள் கைச்சாத்து!

Published

on

” கெரவலப்பிட்டிய யுகதனவி மின் உற்பத்தி நிலையம் தொடர்பில் ஆரம்பக்கட்ட உடன்படிக்கை மட்டுமே கைச்சாத்திடப்பட்டுள்ளது. இன்னும் இரு உடன்படிக்கைகள் உள்ளன. அந்த உடன்படிக்கைகளே முக்கியமானவை.” – என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசுகர தெரிவித்தார்.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தலைமையில் நேற்றிரவு நடைபெற்ற பங்காளிக்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் பேசப்பட்ட விடயங்கள் பற்றி விவரிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

” உரப்பிரச்சினை, யுகதனவி விவகாரம், அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாடு உட்பட பல விடயங்கள் தொடர்பில் சந்திப்பில் கலந்துரையாடப்பட்டன.

யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் பங்குகளை வெளிநாட்டு நிறுவனத்துக்கு வழங்கியமை தொடர்பில் எமது நிலைப்பாட்டை அறிவித்தோம். அதன்போது ஆரம்பக்கட்ட உடன்படிக்கையே கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இன்னும் 2 உடன்படிக்கைகள் உள்ளன. அவையே முக்கியமானவை. எனவே, தேவையான யோசனைகளை முன்வைக்குமாறு நிதி அமைச்சர் எமக்கு தெரியப்படுத்தினார்.” – என்றார் தயாசிறி ஜயசேகர.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version