செய்திகள்
அரசுக்கு வலுக்கும் எதிர்ப்பு – எதிர்க்கட்சிகளும் பங்காளிக் கட்சிகளும் கூட்டாக கைகோர்ப்பு
தேசிய தாவரங்கள் தொற்றுநீக்கி தனிமைப்படுத்தும் சேவை நிலையத்தால் நிராகரிக்கப்பட்ட உரமாதிரிகளை, மூன்றாம் தரப்புக்கு வழங்கி ஆய்வுக்குட்படுத்தும் அரசின் முடிவுக்கு பங்காளிக்கட்சிகளும், எதிர்க்கட்சிகளும் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.
சீன நிறுவனமொன்றிடமிருந்து நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட சேதன பசளையில் தீங்கு விளைவிக்கும் பக்டீரியாக்கள் இருப்பதாக தேசிய தாவரங்கள் தொற்றுநீக்கி தனிமைப்படுத்தும் சேவை நிலையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் உள்நாட்டு நிறுவனத்தை சவாலுக்குட்படுத்தும் வகையில் சீன நிறுவனம் அறிக்கை வெளியிடுவதை ஏற்கமுடியாது எனவும் மேற்படி கட்சிகள் அறிவித்துள்ளன.
இது இலங்கையின் இறையாண்மையுடன் தொடர்புபட்ட விடயம் என்பதால், மூன்றாம் தரப்பை நாடும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் எனவும் அரசியல் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
அதேவேளை, அரசின் முடிவுக்கு தேசிய தாவரங்கள் தொற்றுநீக்கி தனிமைப்படுத்தும் சேவை நிலையமும் போர்க்கொடி தூக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews
You must be logged in to post a comment Login