செய்திகள்
தனிமைப்படுதலை நீக்குகிறது பிரித்தானியா?
சிவப்பு பட்டியலில் காணப்படும் நாடுகளை, அப் பட்டியலில் இருந்து நீக்க பிரித்தானியா தீர்மானித்துள்ளது என அந் நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது உலகளாவிய ரீதியில், கொவிட் அச்சுறுத்தல் குறைவடைந்து வரும் நிலையிலேயே இத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்படி, கொலம்பியா, டொமினிகன் குடியரசு, ஈக்வடார், ஹைட்டி, பனாமா, பெரு மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகளே சிவப்பு பட்டியலில் இருந்து நீக்கப்படவுள்ளன.
இந் நாடுகளிலிருந்து வரும் நபர்கள் தற்போது ஒருவருக்கு £2,285 கட்டணம் செலுத்தி பத்து நாட்கள் ஹொட்டலில் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும்.
ஆனால், இனிவரும் காலங்களில், குறைத்த நாட்டு சுற்றுலா பயணிகளை ஹொட்டலில் தனிமைப்படுத்தும் செயற்பாட்டை நீக்குவது தொடர்பில் பரிசீலிக்கப்படவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சிவப்பு பட்டியலில் இருந்த தென்னாபிரிக்கா, பிரேசில் மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகள் குறித்த பட்டியலிலிருந்து நீக்கப்பட்டு இம் மாதம் தொடக்கம் பயணத்தைத் திறந்து விட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#World
You must be logged in to post a comment Login