செய்திகள்

இலங்கை வருகிறார் ஐ.நாவின் விசேட அறிக்கையாளர்

Published

on

எதிர்வரும் நவம்பர் இறுதியில் ஐ.நாவின் விசேட அறிக்கையாளர் ஒருவர் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

நாடு கடந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம், மனித கடத்தல் மற்றும் நவீன முறையிலான அடிமைத்தனம் ஆகிய விவகாரங்களை கையாளும் சிறப்பு அறிக்கையாளரே இவ்வாறு கொழும்புக்கு வருகைதரவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

அரச மேல் மட்டம் மற்றும் சிவில் அமைப்புகள் உட்பட பல தரப்புகளுடனும் பேச்சுகளை முன்னெடுப்பதற்கு ஐ.நாவின் விசேட அறிக்கையாளர் திட்டமிட்டுள்ளார்.

இவர் தனது பயணத்தின் முடிவில் விசேட அறிக்கையொன்றையும் ஐ.நாவில் கையளிக்கவுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

இவர் மனித கடத்தல் தொடர்பான வடக்கு அயர்லாந்து சட்டசபை குழு, போதைப்பொருள் மற்றும் குற்றத்திற்கான ஐ.நா. அலுவலகம், இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு என்பனவற்றில் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

#SrilankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version