செய்திகள்

பௌத்த மதத்திற்கு எதிரானவன் நான் அல்ல!

Published

on

பௌத்த மதத்திற்கு எதிரானவன் நான் அல்ல என யாழ்ப்பாண மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

யாழ். மாநகர சபையின் மாதாந்த அமர்வு இன்று இடம்பெற்றது. இதன் போது, நாக விகாரையின் விகாராதிபதி ஆரிய குளத்தின் புனரமைப்பு பணிகளை நிறுத்துமாறு கோரி மாநகர முதல்வருக்கு, அனுப்பியிருந்தார்.

இதுகுறித்து சபையில் முதல்வர் தெரிவிக்கும் போதே யாழ்ப்பாண மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில் ,

நான் ஒரு மதவாதி அல்ல , அத்துடன் பௌத்த மதத்திற்கு எதிரானவும்அல்ல. நான் இந்து மதத்தைச் சேர்ந்தவன். அதனால் ஏனைய மதங்களுக்கு எதிரானவன் அல்ல.

என்னை மதவாதி என சித்தரிக்கும் வகையில் நாகவிகாரை விகாராதிபதியினால் யாழ் மாநகர முதல்வர் என எந்தவித மரியாதையும் வழங்காது கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

எனவே என்னை தவறான புரிதலுடன் இந்த கடிதத்தை அனுப்பியுள்ளார்கள் என விகாராதிபதிக்கு தெரிவிக்க விரும்புகிறேன்.

அப்பகுதி புனிதபிரதேசமாக இருக்க வேண்டும். நான் ஒரு இந்து மதத்தைச் சேர்ந்த ஒரு தமிழன் அந்த வகையில் நாம் எதிர்காலத்தில் அடையகூடிய தமிழ் தேசியத்தை ஒரு மதச்சார்பற்ற இடமாக அனைத்து மத மக்களும் தாம் விரும்பிய மதத்தை வழிபடுகின்ற அல்லது தங்களுடைய மத அனுஷ்டானங்களில் ஈடுபடுகின்ற இடமாக தமிழ்த்தேசம் கட்டி அமைக்கப்படும் எனத் தெரிவித்தார்.

#SrilankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version