செய்திகள்

பண முதலைகளால் கடல்வளம் அழிப்பு!

Published

on

கடலை நம்பி பல குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. ஆனால் பல பண முதலைகள் அந்த கடல்வளத்தை அழிக்க நினைக்கிறார்கள்.

இவ்வாறு முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் ச.சுகிர்தன் தெரிவித்துள்ளார்.

அவர் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

வடக்கு மாகாணத்தில் றோலர் தொழில் செய்யும் பலர் அரச உத்தியோகத்தர்களாகவும் வேறு தொழில் முயற்சியில் ஈடுபடுபவர்களாகவுமே காணப்படுகின்றனர்.

ஆனால் தொடர்சியாக கடல் தொழிலில் ஈடுபடும் ஒரு சிலரே றோலர் படகு வைத்துள்ளனர். அவர்கள் தமது குடும்பத்தை மட்டுமல்ல கடலையும் நேசிப்பவர்கள்.

ஆனால் கடலை கொள்ளையடிப்பதற்கென்றே முதலீடு செய்தவர்கள், கடலை அழிப்பதற்கென எந்த எல்லைக்கும் போவார்கள். அவ்வாறானவர்களைக் கண்டு நாங்கள் பயப்படப்போவது இல்லை.

தாம் வாழ்வதற்காக எமது கடல் வளத்தையும், மண் வளத்தையும் சிலர் அளித்து வருகின்றனர். இவ்வாறான சம்பவங்களை பார்த்துக்கொண்டிருக்க முடியாது.

எங்கள் உருவப் பொம்மைகளை மட்டுமல்ல, எங்களை சுட்டுப்போட்டாலும் எமது வளங்களை அழிப்பவர்களுக்கு எதிராக நாம் போராடிக்கொண்டே இருப்போம்.

மணல் கொள்ளைக்கு எதிராக குடத்தனையில் போராடிய நண்பன் கேதீஸை சுட்டுக் கொன்றனர். அதனை நாம் மறக்கவில்லை. நாம் அதற்கு பயந்து மணல் கொள்ளையைத் தடுத்து நிறுத்தாமல் பயந்து ஒதுங்கவும் இல்லை. எங்கள் போராட்டம் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version