செய்திகள்

T20 சூப்பர்-12 சுற்றுக்கு முதல்முறையாக நமீபியா

Published

on

நமீபியா முதல் முறையாக T20 உலகக் கோப்பை சூப்பர்-12 சுற்றுக்கு முன்னேறியது.

T20 உலகக் கோப்பை தொடரின் இன்றைய ஆட்டத்தில் நாணய சுற்றில் வென்று முதலில் துடுப்பாடிய அயர்லாந்து அணி 8 இலக்குகள் இழப்பிற்கு 125 ஓட்டங்களை எடுத்தது. T20 உலகக் கோப்பை தொடரின் முதல் சுற்று போட்டிகள் இன்றுடன் முடிகின்றன.

நாளை முதல் சூப்பர் 12 சுற்று போட்டிகள் தொடங்குகின்றன. ஸ்காட்லாந்து, வங்காளதேசம் மற்றும் இலங்கை ஆகிய 3 அணிகளும் சூப்பர் 12 சுற்றுக்கு தகுதிபெற்றுவிட்ட நிலையில், கடைசி அணியை தீர்மானிக்கும் லீக் போட்டி ஷார்ஜாவில் இன்று நடைபெற்றது .

இப்போட்டியில் குரூப்-A நாணய சுற்றில் வென்று துடுப்பாடிய அயர்லாந்து அணி 8 இலக்குகள் இழப்பிற்கு 125 ஓட்டங்கள் எடுத்தது.

ஆரம்ப வீரர்கள் பால் ஸ்டர்லிங் 38 ஓட்டங்கள் , கெபின் ஓ பிரையன் 25 ஓட்டங்கள், அணித்தலைவர் ஆண்டி பார்பிர்னி 21 ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். பின்வரிசை வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் தொடர்ச்சியாக அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

இதையடுத்து 126 ஓட்டங்கள் என்ற இலக்கை துரத்திய நமீபியா அணியின் தொடக்க வீரர்கள் கிரேக் வில்லியம்ஸ் 15 ஓட்டங்களும், ஜேன் க்ரீன் 24 ஓட்டத்தில் ஆட்டமிழந்தனர்.

அதன்பின்னர் எராஸ்மஸ், டேவிட் வீஸ் இருவரும் இணைந்து பொறுப்புடன் ஆடி கடைசி வரை நின்று வெற்றியை உறுதி செய்தனர்.

எராஸ்மஸ் 53 ஓட்டங்களும் (நாட் அவுட்), டேவிட் வீஸ் 28 ஓட்டங்களும் (நாட் அவுட்) எடுத்தனர்.

18.3 ஓவர்களில் 2 இலக்குகளை மட்டுமே இழந்து நமீபியா அணி 126 ரன்கள் குவித்தது.

இதன்மூலம் 8 விக்கெட்இலக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நமீபியா அணி, முதல் முறையாக T 20 உலக கோப்பையில் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளது.

#SPORTS

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version