செய்திகள்

பாடசாலைகளை மூடும் சீனா

Published

on

சீனாவில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து செல்லும் நிலையில் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன.

அத்துடன் நூற்றுக்கு மேற்பட்ட விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

சீனாவின் வடக்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களில் மீண்டும் கொரோனா வேகமாக பரவி வருகிறது.

தொற்று பரவலை தடுக்க லான்சோ நகரில் இருந்து மக்கள் தேவையில்லாமல் வெளியே வரவேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

லான்சோ நகரில் இருந்து பிற மாகாணங்களுக்கு செல்ல விரும்புபவர்கள் கொரோனா தொற்று இல்லை என்ற சான்றிதழை கட்டாயம் காண்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

ஜியான் மற்றும் லான்சோ இடையே 60 சதவீத விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

அதிக அளவிலான பொதுமக்களிடம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளவும், சுற்றலா தளங்களை உடனடியாக மூடவும் மாகாண அரசுகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

நிலக்கரி இறக்குமதிக்காக மங்கோலியாவில் இருந்து வந்தவர்கள் மூலம் சீனாவில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

#world

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version