செய்திகள்

இலங்கைக்கு கடத்த இருந்த ஒரு தொகை கடல் அட்டைகள் மீட்பு!-

Published

on

தமிழகத்தில் இருந்து சர்வதேச கடல் எல்லை ஊடாக இலங்கைக்கு சமீப காலமாக கடல் அட்டைகள் அதிக அளவு கடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்தில் இலங்கைக்கு கடத்துவதற்காக சட்டவிரோதமாக மீனவர்களால் பிடிக்கப்பட்டு பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 2 தொன் கடல் அட்டைகள் அடுத்தடுத்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து நேற்று மாலை சுந்தரம் உடையான் கடற்கரைப் பகுதியில் நாட்டுப்படகில் கடல் அட்டைகள் இருப்பதாக இந்தியக் கடலோர காவல் படையினருக்கு தகவல் கிடைத்ததையடுத்து உடனடியாக நடுக்கடலில் சோதனை செய்ததில் சுமார் 500 கிலோ கடல் அட்டைகள் இருந்தது தெரியவந்தது.

உடனடியாக கடல் அட்டை மற்றும் நாட்டுப் படகு பறிமுதல் செய்யப்பட்டது. கடலோர காவல்படை வருவதை அறிந்த நாட்டுப் படகில் இருந்த மூவர் கடலில் குதித்து மாயமாகினர்.

இதைத்தொடர்ந்து நேற்று இராமேஸ்வரம் அடுத்த சேராங்கோட்டை கடற்கரைப் பகுதியில் சிலர் சட்டவிரோதமாக கடல் அட்டைகளைப் பிடித்து, காட்டு பகுதியில் பதுக்கி வைத்திருப்பதாக இராமேஸ்வரம் மெரைன் பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்ததில், உயிருடன் இதனையடுத்து கடல் அட்டையையும், அதனை வைத்திருந்த அப்பகுதியைச் சேர்ந்த பூபதி என்பவரை கைது செய்துள்ளனர்.

#SrilankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version