செய்திகள்
கொரோனாத் தொற்றுக்குப் பின்னரும் சிறுவர்களுக்கு ஆபத்து!
கொவிட்-19 தொற்றிற்குப் பின்னர் பல் உறுப்பு அழற்சி நோய் நிலைமை சிறுவர்களுக்கு ஏற்படக் கூடியம் வீதம் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு – சீமாட்டி வைத்தியசாலையில் மாத்திரம் இந்நோயால் பாதிக்கப்பட்ட 6 சிறுவர்கள் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெறுவதாகவும், மேலும், இருவர் உயிரிழந்துள்ளதாக சீமாட்டி வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் நளின் கித்துல்வத்த தெரிவித்துள்ளார்.
தற்போது கொழும்பு – சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையில் மாத்திரம் அதிதீவிர சிகிச்சை பிரிவில் 6 சிறுவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதற்கமைய இதுவரையில் சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் 78 பேர் சிகிச்சை பெற்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இதேவேளை கடந்த 5 நாட்களில் இந்த நோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். இதுவே இந்நோயின் அபாய நிலைமை ஆகும்.
எனினும் உரிய நேரத்தில் உரிய சிகிச்சை கிடைக்கப் பெறாவிட்டால் நோயாளர்கள் உயிரிழக்க நேரிடும்.
எனவே இந்நோயை ஆரம்பத்திலேயே இனங்காணப்படுவது அவசியம் எனவும் விசேட வைத்திய நிபுணர் நளின் கித்துல்வத்த தெரிவித்துள்ளார்.
இதேவேளை கொவிட் வைரஸ் தொற்றுக்கு எதிராக எமது உடலில் உருவாகும் நோய் எதிர்ப்பு சக்தி , எமது உடற்பாகங்களுக்கு எதிராகவே செயற்படும் நிலைமை ஏற்படுகின்றமையே நோய் நிலைமை தீவிரமடையக் காரணமாகும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
You must be logged in to post a comment Login