செய்திகள்
மஹிந்தவின் மகனுக்கு எதிராக தயாசிறி ‘அரசியல் போர்’
“மாகாணசபைத் தேர்தலில் ரோஹித்த ராஜபக்ச எனக்கு சவால் கிடையாது. வடமேல் மாகாண மக்கள் எனக்கே ஆதரவு வழங்குவார்கள்.” – என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகர அதிரடியாக அறிவித்துள்ளார்.
இலங்கையில் மாகாணசபைத் தேர்தல் 2022 முற்பகுதியில் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ள நிலையில், முதல்வர் வேட்பாளர் உட்பட தேர்தலுக்கே உரிய சில அறிவிப்புகள் தெற்கு அரசியல் களத்தை சூடுபிடிக்க வைத்துள்ளது.
வடமேல் மாகாணசபைத் தேர்தலில் முதல்வர் வேட்பாளராக களமிறங்க தயார் என ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர அண்மையில் அறிவித்திருந்தார்.
சுதந்திரக்கட்சி கூட்டணியொன்றை அமைத்து, அழைப்பு விடுத்தால் அதனை ஏற்று களமிறங்க தயார் என்பதே தயாசிறியின் கருத்து.
இதற்கிடையில் மொட்டுக் கட்சியின் சார்பில் மஹிந்த ராஜபக்சவின் இளைய மகனான ரோஹித்த ராஜபக்ச வடமேல் மாகாணத்தில் முதல்வர் வேட்பாளராக போட்டியிடக்கூடும் என சிங்கள ஊடங்களில் தகவல்கள் வெளியாகின. இதனை இலக்காகக்கொண்டே குருநாகல் மாவட்டத்தில் அவர் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றார் எனவும் கூறப்பட்டது.
இந்நிலையில் ரோஹித்த ராஜபக்ச, உங்களுக்கு சவாலா என தயாசிறியிடம் எழுப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே,
” சவால் அல்ல. நான் வடமேல் மாகாணத்தில் பிறந்தவன். மக்கள் என்னைத்தான் ஆதரிப்பார்கள்.” – என குறிப்பிட்டுள்ளார்.
You must be logged in to post a comment Login