செய்திகள்

ஊடகவியலாளர் அந்தோனி மார்க்கின் அஞ்சலி நிகழ்வு

Published

on

உயிரிழந்த ஊடகவியலாளர் அந்தோனி மார்க்கின் அஞ்சலி நிகழ்வு, மன்னார் சர்வோதய அமைப்பின் ஏற்பாட்டில், இன்று இடம்பெற்றது.

மன்னார் மாவட்டத்தின் மூத்த ஊடகவியலாளரும், மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான பீ.ஏ.அந்தோனி மார்க் தனது 78 ஆவது வயதில் கொவிட் தொற்று காரணமாக கடந்த மாதம் 21 ஆம் திகதி முல்லைத்தீவு வைத்தியசாலையில் உயிரிழந்தார்.

இந்த நிலையில் அவர் மன்னார் மாவட்டத்தில் ஆற்றிய சேவையை நினைவு கூர்ந்து அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இன்று காலை 10 மணியளவில் மன்னாரில் உள்ள அலுவலகத்தில் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.

குறித்த அஞ்சலி நிகழ்வில் சர்வமத தலைவர்கள், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.

இதன் போது உரையாற்றிய மன்னார் மாவட்ட அரச அதிபர் ஏ.ஸ்ரான்லி டிமெல்,
மக்கள் தமது உரிமைகளுக்காகவும், தேவைகளுக்காகவும் எந்த இடத்தில் போராட்டங்களை மேற்கொண்டாலும் அந்த இடத்தில் எல்லாம் அவருடைய பிரசன்னமும், ஆதரவையும் வழங்கி வந்த மன்னார் மாவட்டத்தின் மூத்த ஊடகவியலாளரும், மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான பீ.ஏ.அந்தோனி மார்க் அவர்களின் இழப்பு மன்னார் மாவட்ட மக்களுக்கு பாரிய பேரிழப்பு எனக் குறிப்பிட்டார்.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version