செய்திகள்

உயிர்த்த ஞாயிறு வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!

Published

on

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மூன்று நீதிபதிகள் அடங்கிய குழு முன்னிலையில் இந்த வழக்கு இன்று 04 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இன்று 24 பிரதிவாதிகளுக்கு எதிராக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதுடன் ஒருவருக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டுள்ள காரணத்தால் அவர் நீதிமன்றுக்கு சமூகமளிக்கவில்லை.

கடந்த 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தன்று தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்களை குறி வைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு திட்டமிடல், உதவி வழங்கல் மற்றும் பலத்த காயங்களுக்கு உட்படுத்துதல் போன்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் பிரதிவாதிகள் 25 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணை எதிர்வரும் நவம்பர் 23 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version