செய்திகள்

விடுதலைப் புலிகள் அமைப்பை மீளுருவாக்கம் செய்ய முயன்றவர் கைது!

Published

on

இலங்கையில் இருந்து இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த விடுதலைப் புலிகள் அமைப்பை மீளுருவாக்கம் செய்வதற்காக ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளியில் இருந்து,

சுமார் 500 சைனைடு குப்பிகள் மற்றும் சைனைடு பவுடர்களை இலங்கைக்கு கடத்த முயன்ற போது, ராமநாதபுரம் க்யூ பிரிவு பொலிஸார் உச்சிப்புளியில் வைத்து கிருஷ்ணகுமார், சசிகுமார், ராஜேந்திரன், சுபாஸ்கரன் ஆகியோரை கைது செய்தனர்.

இதில் தப்பி ஓடிய குமரன் என்ற உதய குமார் என்பவரை கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் வைத்து க்யூ பிரிவு பொலிஸார் கைது செய்து சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு ராமநாதபுரம் மாவட்டம் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில்,

நேற்று (30) அவருக்கு 2 ஆண்டுகள் தண்டனை மற்றும் 2,000 ரூபாய் அபராதம் விதித்து ராமநாதபுரம் மாவட்ட முதன்மை நீதிபதி சண்முகசுந்தரம் தீர்ப்பளித்துள்ளார்.

மேலும் 4 ஆண்டுகள் சிறையில் இருந்ததால் சிறையில் இருந்த காலத்தை தண்டனைக் காலமாக எடுத்துக் கொள்ளப்படும் எனவும் தீர்ப்பளித்துள்ளார்.

இவர் மீது இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்தது போலியான பெயரில் நிரந்தர வருமான வரி கணக்கு எண் தொடக்கியது மற்றும் ஆதார் கார்டு வாங்கியது, சிம்கார்டு வாங்கியது என,

3 பிரிவுகளின் கீழ் வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version