செய்திகள்
டெல்லிக்கு பயணமாகும் கர்நாடக முதலமைச்சர்.
அமைச்சரவை விரிவாக்கம் குறித்து விவாதிக்க கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை எதிர்வரும் 8 ஆம் திகதி டெல்லி பயணமாகவுள்ளார்.
2 நாட்கள் சுற்றுப்பயணமாக டெல்லி செல்லும் அவர் பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, உள்துறை அமைச்சர் அமித்ஷா, கர்நாடக பா.ஜனதா மேலிட பொறுப்பாளர் அருண்சிங் உள்ளிட்டோரை நேரில் சந்திக்கவுள்ளார்.
இந்த சந்திப்பின் போது அமைச்சரவையில் வெற்றிடமாக உள்ள 4 இடங்களை நிரப்புவது மற்றும் வாரியங்களுக்கு புதிய தலைவர்கள் நியமனம் உள்ளிட்ட விடயங்கள் குறித்து விவாதிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
You must be logged in to post a comment Login