செய்திகள்

வீடியோக்கள் நீக்கப்படும் – ‘YouTube’ எச்சரிக்கை!

Published

on

வீடியோக்கள் மூலம் தடுப்பூசிகள் குறித்த தவறான கருத்துகளை பரப்பினால் அந்த வீடியோக்கள் நீக்கப்படும் என யூரீப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலக சுகாதார நிறுவனம் மற்றும் மருத்துவ அதிகாரிகளால் அங்கீகரிக்கப்பட்டதும், உறுதிப்படுத்தப்பட்டதுமான தடுப்பூசிகள் குறித்த புதிய வழிகாட்டுதல்களுடன் கூடிய மருத்துவ கொள்கைகளை யூரீப் நிறுவனம் வெளியிட்டு உள்ளது.

இதற்கமைவாக கடந்த ஆண்டு முதல் கொரோனா தடுப்பூசி கொள்கைகளை மீறியதற்காக 1 லட்சத்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடியோக்கள் நீக்கப்பட்டவுள்ளன.

இக் கொள்கைக்கமைவாக புதிய தடுப்பூசி சோதனைகள், தடுப்பூசியின் வெற்றிகள், தோல்விகள், தடுப்பூசிகள் குறித்த பொது விவாதம் ஆகியவற்றை உள்ளடக்கமாக கொண்டு இருக்கும் வீடியோக்கள் மட்டுமே தொடர்ந்து அனுமதிக்கப்படும்.

மேலும் இந் நிறுவனம் கருத்து தெரிவிக்கையில், அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகள் ஆபத்தானவை, நாள்பட்ட உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தும் என பொய்யான வதந்திகளை பரப்பும் வீடியோக்கள் நீக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

மேலும் கொரோனா தடுப்பூசி குறித்து மட்டுமல்லாது அங்கீகரிக்கப்பட்ட எந்த தடுப்பூசி குறித்தும் தவறான கருத்துகளை பரப்பும் பட்சத்தில் அந்த வீடியோக்கள் நீக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

Exit mobile version