செய்திகள்
பல்கலைக்கழகங்கள் மீள திறக்கப்படுகின்றது! – வெளியானது விசேட அறிவிப்பு
நாட்டின் அரசாங்க பல்கலைக்கழகங்கள் எதிர்வரும் நவம்பர் மாதம் திறப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க இதனை தெரிவித்துள்ளார்.
இதன்படி, மூன்றாம் மற்றும் நான்காம் ஆண்டு மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக அரச பல்கலைக்கழகங்கள் எதிர்வரும் நவம்பர் மாதத்திற்குள் மீண்டும் திறக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.
ஒக்டோபர் மாத இறுதிக்குள் அனைத்து பல்கலைக்கழக மாணவர்களுக்கும் தடுப்பூசி செலுத்துவதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையிலேயே, பல்கலைக்கழகங்களை மீள திறப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இதனிடையே, 2020 உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான பல்கலைக்கழக நுழைவுக்கான வெட்டுப்புள்ளி மதிப்பெண்கள் ஒக்டோபர் இரண்டாவது வாரத்தில் வெளியிடப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
You must be logged in to post a comment Login