செய்திகள்

முதியவர்களுக்கு உதவும் ரோபோ! – ஹைதராபாத் கணினி நிறுவனம் வடிவமைப்பு!

Published

on

தனிமையில் உள்ள முதியவர்களுக்கு உதவும் வகையில் புதிய ரோபோ ஒன்று அறிமுகம் செய்யப்படவுள்ளது.

ஹைதராபாத்தில் அமைந்துள்ள கணினி நிறுவனமான Achsala IT Solutions இதனை வடிவமைக்கிறது.

‘எல்ரோ’ என்ற பிராண்டின் கீழ் இந்த ரோபோக்கள் உருவாக்கப்படவுள்ளன.

குறித்த ரோபோ தொடர்பாக Achsala IT Solutions நிறுவுனர் ராஜேஷ் ராஜு கருத்து தெரிவிக்கையில், “மூத்த வயதினருக்கு உதவ சிறிய வடிவிலான ரோபோக்களை பயன்படுத்தவுள்ளோம். இந்த ரோபோ ஆங்கில மொழியை புரிந்து கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கூகுள் அசிஸ்டன்ட், அலெக்சா மாதிரியான தளங்களின் துணையோடு இதனால் உள்ளூர் மொழிகளையும் புரிந்து கொள்ள முடியும்” என தெரிவித்துள்ளார். .

இந்த ரோபோக்களால் மூத்த குடிமக்களுடன் நேரம் போவதே தெரியாமல் பொழுதை பேசிக் கழிக்கவும், அவர்களை எந்நேரமும் அக்டிவாக வைத்துக் கொள்ளவும், அவசர உதவிகள் தேவைப்படும் நேரத்தில் அடுத்தவர்களுக்கு சமிக்ஞை கொடுக்கவும் உதவமுடியும்.

மேலும், ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, உடல் வெப்பம், ஒக்ஸிஜன் அளவு மாதிரியானவற்றை இந்த ரோபோ வழக்கமான இடைவெளியில் பரிசோதிக்கும்.

மருத்துவரை அணுக, அவர் பரிந்துரைக்கும் மருந்துகளைப் பெற உதவுதல் போன்ற பணிகளையும் இந்த ரோபோ ஆற்றவிருக்கிறது.

விரைவில் இந்த ரோபோவின் சேவை பொது பயன்பாட்டுக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version