செய்திகள்

ஜப்பானில் இருந்து வந்த பயணிக்கு முதல் பிசிஆர் சோதனை!

Published

on

கட்டுநாயக்க, சர்வதேச விமான நிலையத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள புதிய பிசிஆர் ஆய்வகத்தில் வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கான சோதனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது .

இப்புதிய ஆய்வகத்தில் பரிசோதிக்கப்பட்ட முதல் இலங்கையர் ஜப்பானிலிருந்து ஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸ் விமானம் ஊடாக வந்தவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் பின்னர் இங்கிலாந்தை சேர்ந்த வெளிநாட்டவர் சோதனைக்குட்படுத்த்தப்பட்டார் . டுபாயிலிருந்து எமிரேட்ஸ் விமானமூடாக இவர் நாட்டுக்கு வருகை தந்துள்ளார்.

தொடர்ந்தும் கட்டுநாயக்க விமானநிலையத்தின் புதிய பி.சி.ஆர் ஆய்வகத்தில் பல பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த ஆய்வகத்தினூடாக 3 மணிநேரத்தில் பரிசோதனை முடிவுகளை பெற்றுக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது .

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version