செய்திகள்

உலகின் முதல் டி.என்.ஏ. தடுப்பூசியை உருவாக்கியது இந்தியா!

Published

on

உலகின் முதலாவது டி.என்.ஏ. தடுப்பூசியை  இந்தியா உருவாக்கியுள்ளது.

இதனை நியூயோர்க்கில் நடைபெற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் 76 ஆவது கூட்டத்தில் உரையாற்றும்போது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இந்த டி.என்.ஏ. தடுப்பு மருந்தை 12 வயதுக்கு மேற்பட்ட எவருக்கும் கொடுக்கலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் தடுப்பூசிகளை இந்தியாவில் தயாரிப்பதற்கு அதற்கான வளங்களும் வசதிகளும் தம்மிடம் உள்ளன எனவும் உலகிலுள்ள தடுப்பூசி உற்பத்தியாளர்கள் அனைவரும் முன்வரலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

ஐ.நா. பொதுச்சபையின் 76 ஆவது அமர்வில் இந்தியப் பிரதமர் மோடி மேலும் தெரிவிக்கையில்,

துடிப்பான ஜனநாயகத்துக்கு இந்தியா ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. எங்களுடைய ஜனநாயகம் அதன் பன்முகத்தன்மையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

சமத்துவ வளர்ச்சியின் பாதையில் இந்தியா முன்னேறிச் செல்கின்றது.

இந்தியா வளர்ந்தால் உலகம் வளரும். உலகமும் மாறும் கொரோனா காலத்தில் இந்தியா பல சவால்களை சந்தித்துள்ளது. உலகின் பல நாடுகளும் கொரோனா பரவலால் பல இடர்களுக்கு முகம் கொடுத்துள்ளது.

உலகின் முதல் டிஎன்ஏ தடுப்பூசியை இந்தியா உருவாக்கியுள்ளது என்பதை நான் இந்த அவையில் பெருமையுடன் கூற விரும்புகிறேன். அத்துடன் இந்திய விஞ்ஞானிகள் கொவிட்-19 எதிராக நாசியூடாக செலுத்தும் தடுப்பு மருந்தையும் கண்டுபிடித்து வருகின்றனர்.

இன்று பிற்போக்கு சிந்தனை மற்றும் தீவிரவாதம் உலகின் முன் அதிகரித்து வருகின்றது.

பயங்கரவாதத்தை ஒரு அரசியல் கருவியாக பயன்படுத்துகின்றனர்.

ஆப்கானிஸ்தான் பயங்கரவாதத்தைத் தாக்குதலை நடத்தவோ பயங்கரவாதத்தை பரப்பவோ பயன்படுத்தவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும். ஆப்கானிஸ்தானிலுள்ள சூழ்நிலையை எந்தவொரு நாடும் அதன் சுயநலத்துக்காக பயன்படுத்த முயற்சிக்கவில்லை எனவும் நாம் உறுதி செய்ய வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version