செய்திகள்
கொரோனா தொற்றுக்கு மூக்கு வழியாக தடுப்பு மருந்து!
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த போக்ஸ்பயோ நிறுவனம் கொரோனா வைரஸ் பாதிப்பை தடுப்பதற்காக புதிய மருந்தொன்றை கண்டுபிடித்துள்ளது.
‘போக்ஸ்வெல்‘ எனப்படும் ஸ்பிரே மூலம் மூக்கு வழியாக செலுத்தப்படுகின்ற தடுப்பு மருந்தே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இத் தடுப்பு மருந்து கொரோனா வைரஸ் பாதிப்பை 63 சதவீதம் குறைக்கிறது என கண்டறியப்பட்டுள்ளது.
இம் மருந்து 6 முதல் 8 மணி நேரம் வரை பாதுகாப்பை வழங்குகின்றது.
இவ்விடயம் குறித்து போக்ஸ்பயோ நிறுவன தலைவர் வைத்தியர் ராகேஷ் உப்பல் கருத்து தெரிவிக்கையில் போக்ஸ்வெல் என்ற பெயரில் நாங்கள் உருவாக்கிய தடுப்பு மருந்து மற்றும் தடுப்புசி ஆகியவை சுய பாதுகாப்பு கருவிகளுடன் கூடுதல் பாதுகாப்பை வழங்கும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டள்ளார்.
You must be logged in to post a comment Login