செய்திகள்

30 ஆண்டுகளுக்கு பிறகு சினிமா திரையீடு – சோமாலியாவில் சம்பவம்!

Published

on

சோமாலியா என்றதும் முதலில் ஞாபகம் வருவது வறுமை, பட்டினி போன்ற விடயங்கள் தான்.

இந்நாடு தற்போதும் உள்நாட்டுப்போர், வறுமை போன்றவற்றில் சிக்கித்தவிக்கிறது.

இங்கு தற்கொலைபடை தாக்குதல் காரணமாக 1991-ல் திரையரங்குகள் மூடப்பட்டன.

இந்நிலையில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு தலைநகர் மொகாதிசுவில் நஷனல் தியேட்டரில் பலத்த பாதுகாப்புடன் 2 குறும்படங்கள் திரையிடப்பட்டுள்ளன.

இந் நிகழ்வு தொடர்பாக, “இந்த இரவு சோமாலியா மக்களுக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க இரவு” என தியேட்டர் இயக்குனர் அப்திகாதிர் அப்தி யூசுப் கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும், பல வருட சவால்களுக்கு பிறகு இச்சம்பவம் புதிய நம்பிக்கையை அளித்துள்ளதுடன் சோமாலிய பாடலாசிரியர்கள், திரைப்பட இயக்குனர்கள், நடிகர் நடிகையர் தங்கள் திறமையை வெளிக் காட்டுவதற்கான வாய்ப்பை வழங்கும் தளமாக இது அமையும் என்று தெரிவித்துள்ளார்.

 

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version