செய்திகள்

ஆண்டுக்கு 70 லட்சம் பேர் உயிர் காவு!

Published

on

காற்று மாசு காரணமாக ஆண்டுக்கு 70 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

2005 ஆம் ஆண்டுக்கு பிறகு உலக சுகாதார அமைப்பு முதன்முதலாக காற்று மாசு தொடர்பான அறிக்கையை (22.09.2021) நேற்றுமுன்தினம் வெளியிட்டது.

இந்த அறிக்கையிலேயே இவ் விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையானது காற்று மாசு மனித குல ஆரோக்கியத்துக்கு மிகப்பெரிய சுற்றுச்சூழல் அச்சுறுத்தல்களில் ஒன்றாக விளங்குகின்றது எனவும் நுண்மாசுகள் மனிதர்களின் நுரையீரல் மற்றும் இரத்த ஓட்டத்தில் ஆழமாக ஊடுருவிச் சென்று மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

மற்றும் வெளிப்புற காற்று மாசுபாட்டால் பெரியவர்களுக்கு இஸ்கிமிக் இதய நோய் மற்றும் பக்கவாதம் ஆகியவை ஏற்படுகின்றன எனவும் குறிப்பிடுகின்றது.

இது குறித்த உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கருத்து வெளியிடுகையில்,

“காற்று மாசால் அதிகளவில் பாதிக்கப்படுகிற மக்களில் பெரும்பாலானோர் மத்திய மற்றும் குறைவான வருமானம் கொண்ட நாடுகளை சேர்ந்தவர்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

காற்று மாசுபாடு தொடர்பான புதிய வழிகாட்டுதல்களையும் உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது.

உலக சுகாதார அமைப்பு வழிகாட்டுதல்கள்படி காற்று மாசுபாடு அளவுகள் குறைக்கப்பட்டால், சுமார் 80 சதவீத இறப்புகள் குறைக்கப்பட்டுவிடலாம் என கூறப்படுகிறது.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version