செய்திகள்

இளவரசர் பிலிப்பின் உயில் – 90 ஆண்டுகள் சீல் வைக்க உத்தரவு! .

Published

on

பிரித்தானிய ராணி எலிசபெத்தின் மறைந்த கணவர் பிரித்தானிய இளவரசர் பிலிப் எழுதி வைத்த உயிலை 90 ஆண்டுகளுக்கு வெளி உலகுக்கு தெரியாதபடி பாதுகாக்க வேண்டும் என என லண்டன் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிரித்தானிய இளவரசர் பிலிப், கடந்த ஏப்ரல் மாதம் தந்து 99 ஆவது வயதில் மரணித்தார்.

மறைந்த இளவரசர் பிலிப், தனது மனைவி இரண்டாம் எலிசபெத்தின் கௌரவத்துக்காக உயில் குறித்த ரகசியம் பாதுகாக்கப்படவேண்டும் என விரும்பினார்.

அரச குடும்பத்தின் கண்ணியத்தை காப்பதற்காக இளவரசர் பிலிப்ஸ் எழுதிய உயிலை 90 ஆண்டுகளுக்கு வெளி உலகுக்கு தெரியாதபடி பாதுகாக்க வேண்டுமென லண்டன் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் உயிலின் நகலை பதிவு செய்யவோ,நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவோ தடைவிதிக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

1 Comment

  1. Pingback: கொலைக்களமாகும் மத்திய கிழக்கு நாடு! 100 பேர்களுக்கு மரண தண்டனை - tamilnaadi.com

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version