செய்திகள்
ஒவ்வொரு இந்தியருக்கும் நன்றி! – விராட் கோலி ருவிட்
இந்திய கிரிக்கெட் அணியின் கப்டனாக செயற்பட்டு வரும் விராட் கோலி, T20 கப்டன் பதவியிலிருந்து விலகுகிறேன் என அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது ருவிற்றர் பதிவில்,
இந்தியாவுக்காக விளையாடியது மட்டுமல்லாமல், இந்திய அணியை வழிநடத்தியது எனக்கு கிடைத்த மிகப் பெரிய அதிர்ஷ்டமாகும். இந்திய கிரிக்கெட் அணியின் கப்டனாக நான் இருந்த நேரத்தில் எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி. என்னுடைய அணி வீரர்கள், அணி நிர்வாகக் குழு, தேர்வுக் குழு, பயிற்சியாளர்கள் மற்றும் நாங்கள் வெற்றிபெற வேண்டும் என நினைத்த ஒவ்வொரு இந்தியருக்கும் நன்றி. அவர்கள் இல்லாமல் நான் இதை செய்திருக்க முடியாது.
வேலைப் பளு என்பது மிக முக்கியமான விஷயம் என்பதை புரிந்துகொள்கிறேன். கடந்த 8 முதல் 9 ஆண்டுகளாக நான் மூன்று வித கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடி வருவதால் அதிக வேலைப் பளு இருப்பதை உணர்கிறேன். அதேபோல கடந்த 5 முதல் 6 ஆண்டுகளாக அணியின் கப்டனாக செயற்பட்டு வருவதாலும் வேலைப் பளு அதிகமாக உள்ளது.
அதன் பொருட்டு ஒக்ரோபர் மாதம் டுபாயில் நடக்கவுள்ள T20 உலகக்கோப்பை தொடருடன் T20 கேப்டன் பதவியிலிருந்து விலகுகிறேன். நான் கேப்டன் பதவியிலிருந்து விலகினாலும் ஒரு பேட்ஸ்மேனாக T20 அணிக்கு எனது பங்களிப்பை முழுமையாக கொடுப்பேன் என்று கூறியுள்ளார்.
You must be logged in to post a comment Login