செய்திகள்

விண்ணப்பதாரிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி! – கல்வி அமைச்சு

Published

on

விண்ணப்பதாரிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி! – கல்வி அமைச்சு

நாட்டில் இவ் ஆண்டு நடைபெறவுள்ள கல்விப் பொதுதராதர உயர்தரப் பரீட்சைக்கு 2 ஆயிரத்து 922 விண்ணப்பங்கள் மாத்திரமே இதுவரை கிடைக்கப்பெற்றுள்ளன என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன்  தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைகளுக்கு தோற்றுவதற்கு 6 ஆயிரத்து 589 விண்ணப்பங்கள் மட்டுமே  அனுப்பப்பட்டுள்ளன.

நாட்டில் இடம்பெற்றுவரும் அதிபர்-ஆசிரியர் தொழிற்சங்க போராட்டம் காரணமாக மாணவர்களின் விண்ணப்பங்கள் தொடர்பில் நடவடிக்கைகள் எவையும் எடுக்காதிருந்தமையே விண்ணப்பதாரிகளின் வீழ்ச்சிக்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, உயர்தரப் பரீட்சை மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஆகியவற்றுக்கான விண்ணப்ப காலம் நேற்றைய தினம் நிறைவடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version