செய்திகள்
வெடுக்குநாறி மலையில் இராணுவம் குவிப்பு – விக்கிரகங்கள் மாயம்!
வெடுக்குநாறி மலையில் இராணுவம் குவிப்பு – விக்கிரகங்கள் மாயம்!
வவுனியா – நெடுங்கேணி வெடுக்குநாறி ஆதி லிங்கேஸ்வரர் ஆலயப் பரப்பில் அதிகளவான இராணுவத்தினர் காணப்படுகின்றனர் என அப் பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை அங்கிருந்த விக்கிரகங்களும் அண்மையில் சேதப்படுத்தப்பட்டுள்ளன என பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
அப்பகுதி மக்கள் ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்துக்குள் செல்ல முடியாது என தொல்பொருள் திணைக்களம் தடை விதித்துள்ள நிலையில் அது தொடர்பான வழக்கு இடம்பெற்று வருகின்றது .
இந் நிலையில் ஆலயத்துள் உள்ள விக்கிரகங்கள் தொல்லியல் திணைக்களத்தால் அழிக்கப்பட்டுள்ளதுடன், அங்குள்ள பல விக்கிரகங்களும் சூலங்களும் காணாமல் போயுள்ளன எனவும் பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போது ஆலயத்துக்கு பெளத்த தேரர்கள் அமரும் கதிரை உட்பட பல பொருள்கள் உழவு இயந்திரங்களில் இராணுவத்தினரால் எடுத்துச் செல்லப்படுகின்றன எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர் .
வெடுக்குநாறி ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தை பெளத்த மயமாக்குவதற்கான வேலைகள் மும்முரமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன என தெரிவித்துள்ள பிரதேச மக்கள், இவ் விடயம் தொடர்பில் அரசியல் தலைவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
You must be logged in to post a comment Login