செய்திகள்

நோர்வே எம்.பியாக இலங்கை தமிழ் பெண்

Published

on

நோர்வேயில் இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் இலங்கையைச் சேர்ந்த தமிழ் பெண் ஹம்ஸி குணரட்ணம் (ஹம்சாயினி) நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இவர் தனது 3 வயதில் பெற்றோருடன் நோர்வேக்கு அகதியாக சென்றவர். பின்னர் தமிழ் இளையோர் அமைப்புடன் இணைந்து அரசியலில் ஈடுபட்டவராவார்.

தொழிற்கட்சியின் ஒஸ்லோ இளைஞரணியில் இணைந்த ஹம்ஸி, அதன் பின்னர் அக் கட்சியின் தலைவியாகவும் பதவி வகித்துள்ளார்.

ஒஸ்லோ மாநகர சபையின் பிரதிநிதியாக இவர் தனது 19 வயதில் தெரிவாகியவர். 2015 ஆம் ஆண்டு முதல் ஒஸ்லோ மாநகர சபையின் துணை முதல்வராக பதவி வகிக்கின்றார்.

தொடர்ச்சியாக அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்த ஹம்ஸி, தற்போது நாடாளுமன்ற பதவியை உறுதிசெய்து, முழுநேர அரசியல்வாதியாக நோர்வே தமிழரிடையே உருவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version