செய்திகள்

களஞ்சிய உரிமையாளர்களே அரிசி விலையேற்றத்துக்கு காரணம்!!! – அமைச்சர் பந்துல

Published

on

மக்களின் நுகர்வுக்குத் தேவையான நெல்லை சந்தைக்கு விநியோகிக்காத காரணதால் மட்டுமே அரிசி விலை அதிகரிக்கப்பட்டது என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

மிகப்பெரிய நெற்களஞ்சிய உரிமையாளர்கள் நெல்லைப் பதுக்கியமையாலேயே அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனாலேயே அரிசி விலை அதிகரிக்கப்பட்டது.

அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு சந்தைக்கு அரிசியை விநியோகிப்போம் என உறுதியளித்திருந்தனர். அவ்வாறு உறுதியளிக்கப்பட்ட போதிலும் வழங்கிய வாக்குறுதியை அவர்கள் நிறைவேற்றத் தவறிவிட்டனர்.

நாட்டின் பொருளாதார முகாமைத்துவம் தொடர்பில் அனுபவமற்றவர்கள் அரசு முன்னெடுத்துவரும் நடவடிக்கைகள் தொடர்பில் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

நாட்டுக்குள் அத்தியாவசிய பொருள்களின் இறக்குமதியை கட்டுப்படுத்துவதற்கே 623 பொருள்களுக்கு 100 வீத நிதி வைப்பை மத்திய வங்கி அறிவித்துள்ளது. எனவே இவ் விடயம் தொடர்பில் மக்கள் அச்சப்படத் தேவையில்லை – என்றுள்ளார்.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version