செய்திகள்

நியூயோர்க் தாக்குதல் – ஆவணங்களை வெளியிட பைடன் உத்தரவு!

Published

on

அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் இடம்பெற்ற இரட்டைக் கோபுரத் தாக்குதல் தொடர்பில் புலனாய்வுத் துறையினரால் நடத்தப்பட்ட விசாரணைகள் தொடா்பான ரகசிய ஆவணங்களை வெளியிடுமாறு அதிபா் ஜோ பைடன் நீதித்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

குறித்த தாக்குதல் சம்பவத்தின் 20 ஆவது ஆண்டு நினைவுதினம் சில நாள்களில் கடைப்பிடிக்கப்படவுள்ளது. இந் நினைவு தினத்தை முன்னிட்டு அமெரிக்க அதிபா் பைடன் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளாா்.

நியூயோர்க் நகரில் கடந்த 2001 ஆம் ஆண்டு செப்ரெம்பா் மாதம் 11 ஆம் திகதி இரு கோபுரங்களைக் கொண்ட வா்த்தக மையத்தில் அல்-கொய்தா பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினா்.

பயணிகள் விமானங்களைக் கடத்தி இரட்டைக் கோபுர கட்டடத்தின் மீது மோதச்செய்து நடத்தப்பட்ட கோரத் தாக்குதலில் 2 ஆயிரத்து 977 போ் உயிரிழந்தனா்.

இந்த தாக்குதலில் உயிரிழந்தோரின் குடும்பத்தினரின் விருப்பத்தின்படி. தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணை ஆவணங்கள் இன்னும் ஆறு மாதங்களில் கட்டங்கட்டமாக வெளியிடப்படவுள்ளன,

குறித்த பயங்கரவாதத் தாக்குதலில் அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளியான சவூதி அரேபிய அரசின் கீழ்நிலை அதிகாரிகள் இரட்டைக் கோபுரத் தாக்குதலில் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்று நாடாளுமன்றக் குழு மறைமுகமாகக் குறிப்பிட்டுள்ளது என சந்தேகங்கள் எழுப்பப்பட்டு வந்தன.

எனவே இந்த தாக்குதல் தொடர்பான முழுமையான விசாரணை அறிக்கை அடங்கிய இரகசிய ஆவணங்கள் கட்டங்கட்டமாக வெளியிடப்படவுள்ளன – எனத் தெரிவித்துள்ளார் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்.

 

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version