செய்திகள்
கொல்லப்பட்டவர் பொலிஸாரின் கண்காணிப்பில் இருந்தவர்! – நியூசிலாந்து பிரதமர்
கொல்லப்பட்டவர் பொலிஸாரின் கண்காணிப்பில் இருந்தவர்! – நியூசிலாந்து பிரதமர்
நியூசிலாந்தில் மக்கள் மீது தாக்குதலை நடத்திய நிலையில், பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதியை நாடு கடத்துவதற்கு நியூசிலாந்து அரசாங்கம் பல வருடங்களாக முயற்சி செய்தது என நியூஸிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் குறிப்பிட்டுள்ளார்.
நியூசிலாந்தில் விற்பனை நிலையம் ஒன்றில் மக்கள்மீது தாக்குதலை நடத்திய பயங்கரவாதி ஒருவரை பொலிஸார் சுட்டுக்கொன்ற சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே நியூசிலாந்து பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
சுட்டுக்கொல்லப்பட்ட நபர் நியூசிலாந்துக்கு 2011 ஆம் ஆண்டு மாணவர் விசாவில் வந்து, அகதி அந்தஸ்து கோரினார். ஆனால் அவரது கோரிக்கை ஆரம்பத்தில் நிராகரிக்கப்பட்டதன் பின்னர் 2013 ஆம் ஆண்டில் அகதி அந்தஸ்து வழங்கப்பட்டது.
ஆனால் அகதி அந்தஸ்து மோசடியாக பெறப்பட்டது என கிடைத்த தகவல்களை அடுத்து 2016 ஆம் ஆண்டில் அவர் பொலிஸாரின் கண்காணிப்புக்குள் இருந்து வந்துள்ளார். அவருடைய அகதி அந்தஸ்து 2019 இல் இரத்து செய்யப்பட்டது இந்நிலையில் அவரை நாடு கடத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
ஆனால் அவர் நாடு கடத்தப்படுவதற்கு எதிராக மேல்முறையீடு செய்தார். எனவே அகதி அந்தஸ்து வழக்கு தீர்க்கப்படுகின்ற வரை அதிகாரிகள் அவரை சிறையில் தடுத்துவைக்க முயன்றனர்.
ஆனால் அவ்வாறு தடுத்து வைக்க சட்டம் இல்லாததால் அது பயனளிக்கவில்லை. குறித்த நபர்
ஐ.எஸ்.அடிப்படைவாத கொள்கைகள் கொண்ட இலங்கையர் – என்றார்.
You must be logged in to post a comment Login