செய்திகள்
முல்லைக்கு வந்தடைந்தது 80 ஆயிரம் கிலோ சீனி
முல்லைக்கு வந்தடைந்தது 80 ஆயிரம் கிலோ சீனி
முல்லைத்தீவு மாவட்டத்தில் சீனி பற்றைக்குறை காணப்பட்ட நிலையில், அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு அமைவாக பலநோக்கு கூட்டுறவு சங்கம் மக்களுக்கு சீனியை வழங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
இதற்கமைய பலநோக்கு கூட்டுறவு சங்கங்களில் சொரியாக விற்கப்படும் வெள்ளைச்சீனி 122 ரூபாவாகவும், பொதி செய்யப்பட்டால் 125 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.
அதேவேளை சொரியாக விற்கப்படும் சிவப்பு சீனி125 ரூபாயாவாகவும் பொதி செய்யப்பட்டால் 128 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
இது தொடர்பில் கூட்டுறவு சங்க அதிகாரி தெரிவிக்கையில்,
முதற்கட்டமாக 20 ஆயிரம் கிலோகிராம் சிவப்பு சீனியும் 60 ஆயிரம் கிலோகிராம் வெள்ளை சீனியுமாக 80 ஆயிரம் கிலோகிராம் சீனியையும் கொழும்பில் இருந்து முல்லைத்தீவு மாவட்டத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
நாட்டில் சீனிக்கு தட்டுப்பாடு நிலவி வருகின்ற நிலையில், அதனை நிவர்த்தி செய்யும் நோக்கில் மக்களுக்கு தேவையான சீனியை கூட்டுறவு சங்கங்களினூடாக வழங்கும் நடவடிக்கையில் பலநோக்குக் கூட்டுறவு சங்கம் ஈடுபட்டுள்ளது.
கொள்வனவு செய்யப்பட்ட சீனி, புதுக்குடியிருப்பு பலநோக்கு கூட்டுறவு சங்கத்துக்கு 17 ஆயிரம் கிலோவும், கரைத்துறைப்பற்று பலநோக்கு கூட்டுறவு சங்கத்துக்கு 30 ஆயிரம் கிலோவும், ஒட்டுசுட்டான் பலநோக்கு கூட்டுறவு சங்கத்துக்கு 2 ஆயிரம் கிலோவும், துணுக்காய் பலநோக்கு கூட்டுறவு சங்கத்துக்கு 5 ஆயிரம் கிலோவும் விசுவமடு பலநோக்கு கூட்டுறவு சங்கத்துக்கு 6 ஆயிரம் கிலோவும் வழங்கப்படவுள்ளது’ – என்றார்.
You must be logged in to post a comment Login