செய்திகள்

நாளாந்தம் 1000 சுற்றுலாவிகள் நாட்டுக்கு!!

Published

on

நாளாந்தம் 1000 சுற்றுலாவிகள் நாட்டுக்கு!!

நாளாந்தம் ஆயிரம் வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகளை நாட்டுக்கு அழைத்து வருவதற்கான விசேட வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

தற்போது நாளாந்தம் 250 வௌிநாட்டு சுற்றுலா பயணிகளே நாட்டுக்கு வருகை தருகின்றனர் என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டார்.

மேலும், அமெரிக்கா, கனடா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளிலிருந்து சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தருகின்றனர்.சுகாதார அமைச்சின் விதிமுறைகளுக்கு அமைவாக சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படும்.

சுகாதார அமைச்சால் குறிப்பிடப்பட்டுள்ள ஆபத்துமிக்க நாடுகளைத் தவிர ஏனைய நாடுகளிலிருந்து சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வருகை தர முடியும். நாட்டுக்கு வருகைதரும் சுற்றுலாப் பயணிகள், காப்புறுதி பெற்றிருத்தல் அவசியமாவதுடன், பி.சி.ஆர். பரிசோதனைகளுக்கான கட்டணத்தை செலுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இரண்டு தடுப்பூசிகளையும் பெற்ற ஒருவருக்கு பி.சி.ஆர். பரிசோதனையில் தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை எனின், அவர்களுக்கு வௌியே செல்ல அனுமதி வழங்கப்படவுள்ளது. தடுப்பூசிகளை பெறாதவர்கள் 14 நாள்கள் தனிமையில் இருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

சுற்றுலாப் பயணிகளுக்காக புராதன இடங்கள், வழிபாட்டுத்தலங்கள், சரணாலயங்கள் உள்ளிட்ட 22 சுற்றுலாத்தலங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன எனவும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டார்.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version