செய்திகள்

தலிபான்களால் காபூல் விமான நிலையத்துக்கு சீல்!!

Published

on

தலிபான்களால் காபூல் விமான நிலையத்துக்கு சீல்!!

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் விமான நிலையத்துக்கு தலிபான்கள் சீல் வைத்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அதிகாரத்தை கைப்பற்றியுள்ள நிலையில் அந்நாட்டு மக்கள் பல்வேறு நாடுகளுக்கு தப்பிச்சென்று வருகின்றனர்.

பெரும்பாலானவர்கள் காபூல் விமான நிலையம் வழியாக தப்பிச்செல்லும் நிலையில் அவ் விமான நிலையத்துக்கு தற்போது சீல் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் காபூல் விமான நிலையத்துக்கு செல்லும் பாதைகளில் சோதனைச் சாவடிகளை அமைத்து கண்காணிப்பு பணிகளை தலிபான்கள் தொடங்கியுள்ளனர்.

எனினும் நாட்டை விட்டு வெளியேறுவதற்காக காபூல் விமான நிலையத்தை சுற்றி ஏராளமான மக்கள் முகாம்களில் தங்கியுள்ளனர். இன்னொரு புறம் தரை வழியாக ஏராளமான ஆப்கானியர்கள் பாகிஸ்தானில் தஞ்சமடைந்து வருகின்றனர். இதற்கிடையே காபூல் விமான நிலையத்தில் வெகுவிரைவில் மீண்டும் ஒரு பயங்கரவாத தாக்குதல் நடக்க அதிக வாய்ப்புகள் உள்ளன என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரித்துள்ளார்.

காபூல் விமான நிலைய பகுதியில் அமெரிக்கர்கள் மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அமெரிக்க தூதரகம் எச்சரித்துள்ளது. காபூல் விமான நிலையம் அருகே ISIS-K தீவிரவாதிகள் கடந்த வியாழக்கிழமை நடத்திய தாக்குதலில் 169 ஆப்கானிய பிரஜைகள் மற்றும் 13 அமெரிக்க இராணுவ வீரர்கள் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version