செய்திகள்
தொழிலுக்காக வெளிநாடு செல்வோருக்கு விசேட அறிவிப்பு!!
வௌிநாடுகளுக்கு தொழிலுக்காக செல்லவுள்ளோர் விரைவாக வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் தங்களை பதிவுசெய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
பதிவுசெய்பவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி ஏற்றப்படும் என வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பொது முகாமையாளர் மங்கள ரன்தெனிய தெரிவித்தார்.
வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் காணப்படும் தடுப்பூசிக்கான விண்ணப்பத்தை பூர்த்திசெய்து , அதனைபதிவேற்றுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
வௌிநாடுகளுக்கு தொழிலுக்காக அனுப்பப்படுவோருக்கு கட்டாயம் தடுப்பூசி ஏற்றப்பட்டிருக்க வேண்டும் என்ற அறிவித்தலுக்கு அமைய, இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நாரஹென்பிட்டியிலுள்ள இராணுவ வைத்தியசாலையில் இவர்களுக்கான தடுப்பூசி ஏற்றப்படுகிறது.
இதேவேளை, குறிப்பிட்ட தடுப்பூசியை மாத்திரமே பணியாளர்கள் ஏற்றியிருக்க வேண்டும் என எந்தவொரு நாடும் இதுவரை அறிவிக்கவில்லை என வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பொது முகாமையாளர் தெரிவித்தார்.
அதற்கமைய பைஸர், அஸ்ராஜெனகா, மொடனா மற்றும் சினோபார்ம் ஆகிய தடுப்பூசிகளை வௌிநாடுகள் அங்கீகரித்துள்ளன எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
You must be logged in to post a comment Login