செய்திகள்

அரிசி விலையை அதிகரிக்க முடியாது – பந்துல குணவர்தன

Published

on

அரிசி விலையை அதிகரிக்க முடியாது – பந்துல குணவர்தன

கொரோனாவால் பொருளாதார ரீதியில் நாட்டு மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அரிசியின் விலை ஏற்றத்தை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்றைய தினம் (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்
கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அரிசியின் விற்பனை விலையை அதிகரிக்குமாறு அரிசி ஆலையின் உரிமையாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். மக்களின் முக்கிய உணவுப்பொருளான அரிசியின் விலையை அதிகரிக்க அரசாங்கத்தால் இடமளிக்க முடியாது.

ஜனாதிபதி தலைமையிலான அமைச்சரவை ஒரு கிலோகிராம் அரிசியை 100 ரூபாக்கும் குறைந்த விலையில் வழங்குவதற்கு தீர்மானித்துள்ளது.

நிர்ணய விலைக்கு எதிராக அதிக விலையில் அரிசியை விற்பனை செய்வதெற்கென 6 களஞ்சியசாலைகளில்
பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 40 லட்சம் மெற்றிக் தொன் நெல் கைப்பற்றப்பட்டுள்ளது. இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களுக்கெதிராக கடுமையான சட்டநடவடிக்கை எடுக்கப்படும் – என்றார்.

அத்துடன், கொரோனாத் தொற்று பரவலால், உலகளாவிய ரீதியில் விநியோக வலையமைப்பு முடங்கிப்போயுள்ளதால் பொருள்களின் விலைகளில் அதிகரிப்பு ஏற்படும் போக்கு உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version