செய்திகள்

காபூல் விமான நிலையம் அருகே இரட்டைக் குண்டுத் தாக்குதல்! – தொடரும் மீட்பு பணி

Published

on

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விமான நிலையம் அருகே இரட்டை குண்டுவெடிப்பு இடம்பெற்றுள்ளது. இது தாக்குதலில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். கிட்டத்தட்ட 60 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காபூல் விமான நிலையத்தின் அப்பி வாயில் பகுதி அருகே முதலாவது குண்டுத்தாக்குதலும், அதன் அருகே உள்ள பரோன் விடுதி அருகே இரண்டாவது குண்டுத் தாக்குதலும் நடத்தப்பட்டுள்ளது. இக் குண்டுத் தாக்குதலில், அமெரிக்க ராணுவ வீரர்கள், தலிபான்கள் மற்றும் பொதுமக்கள் பலர் காயமடைந்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ் அமைப்பு தாக்குதல் நடத்த வாய்ப்புக்கள் உள்ளன என அமெரிக்க அதிபர் மற்றும் உளவு அமைப்புக்கள் எச்சரிக்கை விடுத்து 24 மணி நேரத்துக்குள் இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள நிலையில், ஆப்கானிஸ்தானியர்கள் உட்பட வெளிநாட்டினர் பலரும் நாட்டைவிட்டு வெளியேற விமான நிலையத்தில் குவிந்துள்ளனர். இந்த நிலையிலேயே இந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது.

தலிபான்கள் கட்டுப்பாட்டில் ஆப்கான் முழுவதும் வந்துள்ள நிலையில், காபூல் விமான நிலையத்தின் அருகே குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளமை உலக நாடுகளிடையே மிகப்பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

 

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version