செய்திகள்

பீட்சா டெலிவரி செய்யும் முன்னாள் அமைச்சர்! – வைரலாகும் புகைப்படம்

Published

on

ஜெர்மனியில் பீட்சா விநியோகிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார் ஆப்கானிஸ்தானின் முன்னாள் அமைச்சர் சையத் அகமது சதாத்.

இவரின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளன.

சையத் அஹ்மத் சதாத் ஆப்கானிஸ்தானின் முன்னாள் தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்ப அமைச்சராக பதவி வகித்தவர். 2018 இல் ஆப்கானிஸ்தான் அஷ்ரப் கனியின் அமைச்சரவையில் இணைந்த அவர் கருத்து வேறுபாடுகள் காரணமாக 2020 இல் அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதமளவில் ஜெர்மனி சென்று அங்கு வசித்து வருகிறார்.

ஜெர்மனியில் வசிக்கும் சதாத், கையில் இருந்த பணம் தீர்ந்த பிறகு ஜெர்மன் நிறுவனமான லிவ்ராண்டோவில் உணவு விநியோகம் செய்யும் நபராக பணியாற்றி வருகிறார். அதுவும் சைக்கிளில் சென்று பீட்சா வழங்கும் வேலை செய்கிறார்.

இவர் ஒக்ஸ்போட் பல்கலைக்கழகத்தில் தகவல் தொடர்பு மற்றும் மின்னணு பொறியியலில் இரண்டு முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார்.

இவர் சவூதி அரேபியா உட்பட 13 நாடுகளில் 20 க்கும் மேற்பட்ட நிறுவனங்களுடன் தகவல் தொடர்பு துறையில் 23 ஆண்டுகள் பணியாற்றினார். 2005 முதல் 2013 வரை ஆப்கானிஸ்தானின் தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் தொழில்நுட்ப ஆலோசகராக பணியாற்றினார். 2016 முதல் 2017 வரை லண்டனில் உள்ள அரியானா டெலிகாமின் தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றினார். பின்னர் 2018 முதல் ஆப்கன் அமைச்சராக பணியாற்றினார்.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version