செய்திகள்

சாவிலும் தொற்றிலும் இலங்கை முதலிடம்!!

Published

on

சாவிலும் தொற்றிலும் இலங்கை முதலிடம்!!

கொரோனாத் தொற்றாளர்கள் மற்றும் மரணங்களின் வேகம் அதிகரிக்கும் நாடுகளின் பட்டியலில் இலங்கை முதலிடத்திலுள்ளது என்று ஜோன் ஹெப்கின் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் நாளாந்தம் ஒரு மில்லியன் பேரில் 5.72 சதவீதமானோர் கொவிட் தொற்றால் உயிரிழகின்றனர் என அந்தப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

இவ்வாறான நிலையில் உடனடியாக ஊரடங்கை நடைமுறைப்படுத்தினால் எதிர்வரும் 20 நாள்களில் பதிவாகக்கூடிய ஆயிரத்து 200 மரணங்களைத் தவிர்க்க முடியும் என்று சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவை விட இலங்கையில் கொவிட் மரணங்கள் பதிவாகும் வீதம் 15 மடங்கு அதிகமாகும் என ஜோன் ஹெப்கின் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இவ்வாறான அபாயமான நிலையில் இரவில் மாத்திரம் ஊரடங்கை நடைமுறைப்படுத்தியிருப்பது பிரயோசனமற்ற தீர்மானமாகும் எனவும் அவர் கூறியுள்ளார்.

 

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version