சமையல் குறிப்புகள்
காலிபிளவர் சில்லி
தேவையான பொருட்கள் :
காலிபிளவர் – 1
மைதா மா – அரை கப்
சோளம் மா – கால் கப்
அரிசி மா – ஒரு கைப்பிடி அளவு
மிளகாய் தூள் – 1 டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவைக்கு
இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
செய்முறை :
காலிபிளவர் பூவை தனித்தனியாக பிரித்தெடுத்துக்கொள்ளவும்.
கடாயில் தண்ணீர் ஊற்றி சிறிதளவு உப்பு சேர்த்து காலிபிளவரை கொட்டி சிறிது நேரம் வேகவைத்து இறக்கவும்.
வேக வைத்த காலிபிளவரை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் மைதா மா, சோளமா மா, அரிசி மாவு, மிளகாய் தூள், இஞ்சி பூண்டு விழுது, உப்பு ஆகியவற்றை ஒன்றாக கலந்து கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் பிரட்டி வைத்த காலிபிளவர் பூவை எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்து பரிமாறவும்.
இப்போது ருசியான காலிபிளவர் சில்லி ரெடி.
#LifeStyle
You must be logged in to post a comment Login